இந்தியாவில் சர்வதேச அழகு, தோல் பராமரிப்பு பிராண்டுகளை வழங்க குளோபல் ஸ்டோரை அறிமுகப்படுத்தும் நைகா
இந்தியாவின் முன்னணி அழகு மற்றும் பேஷன் மின்வணிக தளமாக இயங்கிவருகிறது நைகா . இந்நிறுவனம் சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்காக குளோபல் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது . இதன்மூலமாக , சர்வதேச அழகு பிராண்டுகளை இந்திய நுகர்வோருக்கு எல்லை தாண்டிய இ - காமர்ஸ் தளம் மூலம் கொண்டு வருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது . நைகா மொபைல் அப்ளிகேஷன் மூலமாக குளோபல் ஸ்டோரை எளிதாகவும் பிரத்தியேகமாகவும் அணுக முடியும் . பிராண்டுகள் இறக்குமதி தொடர்பான அனைத்து இந்திய இ - காமர்ஸ் விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்க முயற்சிக்கின்றன , மேலும் அனைத்து சுங்க வரிகளையும் உள்ளடக்கிய விலையையே காண்பிக்கும் . பொருந்தக்கூடிய அரசாங்க விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்கள் KYC விவரங்களை வழங்க வேண்டும் . ஆர்டர்கள் ஆஃப்ஷோர் ஃபுல்பில்மெண்ட் மையத்திலிருந்து 7 முதல் 20 நாட்களுக்குள் நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே அனுப்பப்படும் . குளோபல் ஸ்டோர் மூலம் , நைகா சர்வதேச பிராண்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் வலுவான வலையமைப்பை இந்தி...